அமெரிக்க அதிபர் தேர்தல்: புதிய அதிபராகிறார் ஜோ பைடன்

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 273 தேர்தல் சபை வாக்குகளை பெற்று அமெரிக்க அதிபராகவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரும் தற்போதைய அதிபருமான ட்ரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் போட்டியிட்டார்.
தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.  அமெரிக்க தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270 தேர்தல் சபை வாக்குகளை பெறும் வேட்பாளர் அதிபர் ஆக முடியும்.
இந்நிலையில், 273 வாக்குகளை ஜோ பைடன் பெற்று முன்னிலையில் உள்ளார். அதே நேரம் ட்ரம்ப் 214 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.