காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் நோயாளி – இனியாவது விழித்துக் கொள்வோமா?

140 Views

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட

வெகு தூரத்தில் இருக்கும் கனடாவில் இப்படி ஒரு நிகழ்வு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், நம்மூர் பகுதியில் காலநிலை நோயாளி குறித்த பதிவுகள் வெளிவர நீண்ட நாள்கள் ஆகாது. மேலாதிக்க நாடுகள் செய்யும் தவறுகள் மற்றும் சுரண்டல்களால் வளரும் நாடுகளும் பாதிப்புகளை சந்தித்துதான் ஆக வேண்டும்.

நோய்க்கணிப்பாக `காலநிலை மாற்றம்’ என்பதை மருத்துவர் தனது மருத்துவக் குறிப்பேட்டில் பதிவு செய்திருப்பதில் எவ்வளவு புதுமை ஒளிந்து கிடக்கிறது. ஆனால் அந்தப் புதுமை மிகப்பெரும் ஆபத்தை கண்முன் நிறுத்துகிறது.

புற்றுநோயாளி, இதய நோயாளி என்பதைக் கேள்விப்பட்டு வந்த நாம், சமீபமாக புதுப்புது நோயாளிகளைச் சந்தித்து வருகிறோம். `கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி…’ எனும் அதிர்ச்சியிலிருந்தே இன்னும் நாம் மீளாத சூழலில், இப்போது காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி என்பது நமக்கான எச்சரிக்கை மணியாகவே பார்க்க வேண்டும்.

நன்றி-விகடன்

Leave a Reply