உலகின் பொருளாதாரம் 7 விகிதத்தால் சரியலாம் – அனைத்துலக நாணய நிதியம்

ஐரோப்பாவுக்கும், அமெரிக்கா வுக்கும் இடையில் பொரு ளாதார மோதல்கள் ஆரம்பித்தால் அது உலகின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என வும் இந்த பாதிப்பு என்பது பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் பொருளாதாரத்தின் மொத்த அள

வாக இருக்கும் எனவும் அனைத் துலக நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் கீதா கோபிநாத் கடந்த வியாழக்கிழமை(24) தெரிவித்துள் ளார்.

 அமெரிக்காவில் இடம்பெறும் தேர்தலில் டொனால்ட் டிறம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அவர் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை 20 விகிதமாக உயர்த்தப்போவதாக தெரிவித்துள்ளார். அதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தாமும் வரியை உயர்த்தப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித் துள்ளது.

டிறம்பின் பொருளாதார திட்டம் எமக்கு முழுமையாக தெரியாது. ஆனால் பொருளாதார தடைகளை; மற்றும் வரி உயர்வை அவர் மேற்கொண்டால் அது உலகின் மொத்த உற் பத்தில் 7 விகி வீழச்சியை ஏற்படுத்தும், இந்த வீழச்சி என்பது பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் பொருளாதாரத்தின் மொத்த அளவாக இருக்கும்.

பல நூறு பில்லியன் டொலர்கள் பெறுமதியான வரிகளில் தான் கடந்த பல தசாப்பங்காள இந்த உலகம் இயங்கிக்கொண்டு இருக்கின்றது. ஆனால் தற்போதைய நிலையில் உலகின் கடன் தொகை மிகவும் அதிகரித்துச் செல்கின்றது. எனினும் பணவீக்கம் உலகில் குறைந்து வருவதும், வேலைவய்பின்மையை அது அதிகரிக்காது செல்வதும் ஆறுதல் தரும் விடையங்கள் என கீதா மேலும் தெரிவித்துள்ளார்.