வடகொரிய துருப்புக்களை தாக்குவோம் – அமெரிக்கா

ரஸ்யாவில் உள்ள வடகொரிய இராணுவம் உக்ரைன் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டால் அவர்கள் உக்ரைன் படையினரின் இலக் காக இருக்கும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புச் சபையின் பேச்சா ளர் ஜோன் கேர்பி கடந்த புதன் கிழமை(23) தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவில் ஒரு தொகை வடகொரிய படையினர் உள்ளனர். அவர்களில் எண்ணிக்கை தெரி யாது, அவர்கள் அங்கு என்ன செய் கிறார்கள் எனவும் தெரியாது. ஆனால் அவர்கள் உக்ரைன் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டால் அது மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்ரின் தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்தின் ஆரம்பத் தில் 3000 வடகொரியப் படையினர் கிழக்கு ரஸ்யாவுக்கு சென்றுள்ள னர். அவர்கள் ரஸ்யாவில் உள்ள பல பயிற்சித் தளங்களுக்கு அனுப் பப்பட்டு வருகின்றனர். அவர்கள் என்ன பயிற்சியில் ஈடுபடுகின்றனர் என்பது எமக்கு தெரியாது. ஆனால் அவர்கள் மேற்கு ரஸ்யாவுக்கு சென்று அங்கு போரில் ஈடுபடும் சாத்தியங்கள் உள்ளது என கேர்பி தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த தகவல்களை ரஸ்யாவும், வடகொரியாவும் மறுத் துள்ளன. மேலும் படையினரின் பயிற்சி விவகாரம் என்பது இரு நாடு களுக்கும் இடையிலான இறமை தொடர்புள்ள விவகாரம் என ரஸ்யாவின் அரச பேச்சாளர் டிமிற்றி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுன் மாதம் ரஸ்ய அதிபர் வடகொரியாவுக்கு சென்றபோது இரு நாடுகளும் தந்திரேபாய உடன்பாடுகளை மேற்கொண்டிருந் தது இங்கு குறிப்பிடத்தக்கது.