பீரிஸுடன் இணைந்து பணியாற்றுவதற்கு விருப்பம்; இந்திய வெளிவிவகார அமைச்சர் கடிதம்

பீரிஸுடன் இணைந்து பணியாற்றுவதற்கு விருப்பம்பீரிஸுடன் இணைந்து பணியாற்றுவதற்கு விருப்பம்: இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பீரிஸுக்கு இது தொடர்பில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சருடன் இணைந்து பணியாற்றும் விருப்பத்தை வெளியிட்டிருப்பதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கை குறித்த அணுகுமுறையை மாற்றப்போகிறதா இந்தியா? – அகிலன்

இருதரப்பு உறவுக்கு வழிகாட்டும் சிறந்த அயலுறவு, நட்புறவின் முக்கியத்துவம் மற்றும் தலைமைத்துவத்தின் இலக்குக்கு அமைவாக அமைச்சர் பீரிஸுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக இந்தக் கடிதத்தில் இந்திய அமைச்சர் குறிப்பிட்டிருக்கின்றார்.

வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் பீரிஸ் பதவியேற்றுக் கொண்ட உடனடியாகவே அவரைச் சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply