மலையக மக்கள் முன்னணியில் இருந்து வெளியேறியவர்கள் மீள இணையலாம்- இராதாகிருஷ்ணன்

356 Views
மலையக மக்கள் முன்னணி


மலையக மக்கள் முன்னணி
யில் இருந்து வெளியேறியவர்கள் மீள இணைந்து செயற்பட முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“மலையக மக்கள் முன்னணியில் கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் வெளியில் சென்றவர்கள் தங்களுடைய தவறுகளை உணர்ந்து மீண்டும் கட்சியில் இணைந்து செயற்பட முடியும் என்பதை அனைத்து மத்திய குழு உறுப்பினர்களும் ஏகமனதாகத் தீர்மானித்ததுடன் அவ்வாறான ஒரு நிலையில் கட்சி எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக கட்சியின் கொள்கையுடன் இணைந்து செயற்பட விரும்புகின்றவர்கள் இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் தொடர்பு கொண்டு மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்” – என்றார்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply