ஒரு  தடுப்பூசி கூட கிடைக்காமல் நாடுகள் இருக்கையில்,  booster தடுப்பூசியா-பணக்கார நாடுகளுக்கு WHO கண்டனம்

437 Views

im 368732 ஒரு  தடுப்பூசி கூட கிடைக்காமல் நாடுகள் இருக்கையில்,  booster தடுப்பூசியா-பணக்கார நாடுகளுக்கு WHO கண்டனம்

இலட்சக் கணக்கான மக்கள் ஒரு  தடுப்பூசி கூட கிடைக்காமல் உள்ளபோது, booster தடுப்பூசிகளை  வழங்க பணக்கார நாடுகள் அவசரப்படுவதை  உலக சுகாதார அமைப்பு கண்டித்துள்ளது.

வளர்ச்சியடையாத நாடுகளில் இன்னமும் கொரோனா தடுப்பூசிகளில் ஒரு தடுப்பூசி கூட செலுத்த முடியாத நிலையில் இருக்கையில், ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் booster தடுப்பூசிக்குத்  தயாராகி வருகின்றன.

இந்த நிலையில்   உலக சுகாதார அமைப்பு  வெளியிட்ட அறிக்கையில்,

“ஏற்கனவே உயிர் காக்கும் life jackets வைத்திருக்கும் மக்களுக்கு கூடுதல் life jackets -களை வழங்க திட்டமிட்டு வருகிறோம்.

அதே வேளையில் ஒரு life jackets கூட இல்லாமல் மக்களை தவிக்க  விட்டுள்ளோம். இலட்சக் கணக்கான மக்கள் ஒரு கொரோனா தடுப்பூசியை கூட போடவில்லை. ஆனால் பணக்கார நாடுகள் booster தடுப்பூசிக்கு அவசரப் படுகின்றன” என்று குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply