“தடுப்பூசி செலுத்திக் கொள்வோம் இல்லையெனில் இறந்து போவோம்” ஜெர்மனி சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

297 Views

தடுப்பூசி செலுத்திக் கொள்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து ஜெர்மனியின் சுகாதார அமைச்சர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

ஜெர்மனி கொரோனா வைரஸின் நான்காவது அலையில் சிக்கி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது,

மேற்கு ஐரோப்பாவில் குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அந்நாட்டில் 68 சதவீத மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இது வரையில் ஜெர்மனியில்  5,418,681பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் 99,817 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில்,”இந்த குளிர்காலத்துக்குள் ஜெர்மனியில் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள், நோயிலிருந்து மீட்கப்படுவார்கள் அல்லது இறந்து போவார்கள்” என   பெர்லினில் நடந்த பத்திரிகையாளர்கள் மாநாட்டில் ஜெர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான்  எச்சரித்துள்ளார்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 "தடுப்பூசி செலுத்திக் கொள்வோம் இல்லையெனில் இறந்து போவோம்" ஜெர்மனி சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

Leave a Reply