அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம்-  ரஷிய அதிபர்

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை

உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்தால் கிழக்கு ஐரோப்பியா பகுதிக்கு தங்களது படைகளை கூடுதலாக அனுப்புவோம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கிழக்கு உக்ரைன் பகுதியான டொனட்ஸ்க், லூஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றினர். உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியா மீது படையெடுத்த ரஷியா அந்த பகுதியை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இதற்கிடையே உக்ரைன் எல்லை அருகே ரஷியா தனது படைகளை குவித்துள்ளதாகவும், அந்த நாட்டையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள ரஷியா திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்தது.

உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்தால் கிழக்கு ஐரோப்பியா பகுதிக்கு தங்களது படைகளை கூடுதலாக அனுப்புவோம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் – ரஷிய அதிபர் புதின் ஆகியோர் காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என்று ஜோபைடன் தெரிவித்தார். அதற்கு புதின் கூறும்போது, ரஷியாவின் எல்லைக்குள் தான் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. அவர்களால் எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்தார்.

மேலும் புதினிடம் உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க தூதரக ரீதியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஜோபைடன் வலியுறுத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் நிறைவடைந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம்-  ரஷிய அதிபர்