கடல் சூழ் தீவிலிருந்து நன்றி நவில்கிறோம்- தமிழக அரசிற்கு மனோ எம்.பி நன்றி தெரிவிப்பு

“கடல் சூழ் தீவிலிருந்து நன்றி நவில்கிறோம். வாழ்வாதார உதவி, அனைத்து இலங்கை மக்கள், மலையக தமிழர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு வாழ் ஈழத்தமிழர் ஆகிய அனைவருக்கும் என்ற செய்தி எங்களை நெகிழ்வடைய செய்கிறது” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசினால்,அரிசி 40,000 தொன் 80கோடி ரூபா , மருந்து 137 வகைகள் 28 கோடி ரூபா, பால்மா 500 தொன் 15 கோடி ரூபா, மொத்தம் சுமார் 125 கோடி இந்திய ரூபா, இலங்கை பெறுமதியில் சுமார் 600 கோடி ரூபா பெறுமதியில் இலங்கைக்கு உதவ நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil News