சமீபத்தில் இந்தியாவில் உள்ள அகதிகள் தொடர்பாக சமர்பிக்கப்பட்ட இந்திய உள்துறை அமைச்சகத்தின் 2020-21 ஆண்டு அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் 58,843 இருப்பதாகவும் முகாமிற்கு வெளியே 34,135 அகதிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இந்தியாவில் தஞ்சமடையும் இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் இறுதி நோக்கத்துடன் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதே இந்திய அரசின் அணுகுமுறை என உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியிருக்கிறது.