காஷ்மீரில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதை கண்டிக்கின்றோம்- ஊடகவியலாளர் அமைப்புக்கள்

430 Views

ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதை

அரசிற்கு எதிராக கருத்துக்களைப் பரப்பியதாகக் கூறி கைது செய்யப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த ஊடகவியலாளர் சஜாத் குல்லை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு ஊடகவியலாளர்களின் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

பந்திபோரா மாவட்டத்தில் உள்ள ஹஜினில் வசிக்கும் சஜாத் குல்,உள்ளுர் செய்தித்தாள் மற்றும் அதன் இணையதளத்தில் பயிற்சி நிருபராக பணிந்து வருகின்றார்.

“பத்திரிகையாளர்கள் உண்மைகளை செய்திகளாக்கி, அரசு அதிகாரிகளுக்கு அசௌகரியம் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு, பத்திரிகையாளர்களை கட்டுப்படுத்தும் ஒரு தந்திரமாக இக் கைது உள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்கின்றோம். காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களாக இதைப் பார்க்கிறோம்” என்று காஷ்மீர் பத்திரிகையாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்தோடு ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் ஊடக கண்காணிப்புக்குழுவும் குறித்த ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதை கண்டித்துள்ளது.

Tamil News

Leave a Reply