ஆப்கானிஸ்தான்: “பஞ்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்றிவிட்டோம்- தலிபான் அறிவிப்பு

138 Views

பஞ்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்றிவிட்டோம்

பஞ்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்றிவிட்டோம்: ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அவர்களுக்கு எதிரான தேசிய கிளர்ச்சிக் குழுவினருக்கும் நடந்த  மோதலில்  பஞ்ஷீர் பள்ளத்தாக்கின் முழு கட்டுப்பாடும் தங்கள் வசம் வந்து விட்டது என தலிபான் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து வடக்கே உள்ள எல்லைக்கு அருகே அமைந்துள்ளது பஞ்ஷீர் பள்ளத்தாக்கு. தலிபான் ஆளுகைக்கு எதிரான நடவடிக்கையில் 20 வருடங்களுக்கு முன்பிருந்த அதே நிலைப்பாட்டை அங்குள்ள ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணி (என்ஆப்எஃப்) என்ற குழு தற்போதும் எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆளுகைக்கு கட்டுப்படாத ஒரே பகுதியாக விளங்கி வரும் இந்த  பகுதியில்  தலிபான்கள் ஆயுத போராளிகளுக்கும் பஞ்ஷீர் பள்ளத்தாக்கு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்ததில், 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலைியல், பஞ்ஷீரின் முழு கட்டுப்பாடும் தங்கள் வசம் வந்து விட்டதாக தலிபான் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியுடன் ஆப்கானிஸ்தானின் முழுமையான ஆளுகை தலிபான்வசம் வந்து விட்டது என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், இதை ஏற்க  ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணி (என்ஆப்எஃப்) என்ற குழு மறுத்துள்ளது.

அதே நேரம் பஞ்ச்ஷீர் பகுதியை கைப்பற்றியதாகத் தெரிவித்து  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்  தலிபான்கள் நடத்திய  வெற்றிக்கொண்டாட்ட  துப்பாக்கிச் சூட்டில் 17 பொது மக்கள் உயிரிழந்தும் 41 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply