வனப்புமிக்க நாட்டை யதார்த்தத்தில் கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்

இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்

கனவாகக் காணும் வனப்புமிக்க நாட்டை யதார்த்தத்தில் கட்டியெழுப்ப  நாங்கள் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம் என சோஷலிஸ இளைஞர் சங்கத்தின் தேசிய  குழு அங்கத்தவர் சட்டத்தரணி ஷானிகா சில்வா தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி ஷானிகா சில்வா மேலும் தெரிவிக்கையில்,

இந்த வரவுசெலவும் மரபுரீதியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள  இலக்கங்களின் வித்தை மாத்திரமே. சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம் போன்றே மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் போன்ற துறைகள்மீது தனித்துவமான கவனம் கவனம் செலுத்தப்படவேண்டி உள்ளது.

இவையனைத்திற்கும் அரசாங்கம் 525 பில்லியன் ரூபாவையே ஒதுக்கியுள்ளது.  ஆனால் அரசாங்கம் பாதுகாப்புச் செலவுகளுக்காக மாத்திரம் 529 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. அது கடந்த வருடத்துடன் சார்புரீதியாக 21% அதிகரிப்பினைக் குறித்துக்காட்டுகின்றது.

தனது கட்டுக்கோப்பில் இருக்கின்ற சிறைக்கைதிக்குக்கூட பாதுகாப்பினை வழங்கத் தவறிய அரசாங்கம் பாதுகாப்பிற்காக எனக்கூறி இவ்வளவு பெருந்தொகையான பணத்தை ஏன் செலவிடுகின்றதென நாங்கள் கேள்வி கேட்கிறோம்.  நாட்டின் எதிர்காலத்திற்கான முதலீடான கல்விக்காக அரசாங்கம் 1% பணத்தை மாத்திரமே அதிகமாக வழங்கியுள்ளது.

தமது தகைமைகளுக்கேற்றவாறு பொருத்தமான சம்பளத்துடனான தொழிலொன்றைப் பெற்றுக்கொள்வது இளைஞர்களின் கனவாக அமைகின்றது. ஆனால் இந்த வரவுசெலவில் தொழில்சார்ந்த சிக்கல்கள் தொடர்பில் எந்தவிதமான கவனமும் செலுத்தப்படவில்லை. சுற்றுலாத்துறை, ஆடைத்தொழிற்றுறை போன்றவற்றை எடுத்துக்கொண்டால்  அவர்கள் பாரதூரமான பல பிரச்சினைகனை எதிர்நோக்கி உள்ளார்கள்.

சுற்றுலாத்துறையில் 06 இலட்சம் பேர்வரை தமது வாழ்க்கையை முன்னெடுத்து  வருகிறார்கள். அவர்களில் ஏறக்குறைய 04 இலட்சமாக அமைகின்ற பெரும்பான்மையினர் இளைஞர்களாவர். நிலவுகின்ற நிலைமையின்கீழ் அவர்களில் பெருந்தொகையானோர் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளார்கள்.  அவர்ளுக்காக இந்த வரவுசெலவு எடுத்துள்ள நடவடிக்கை என்னவென நாங்கள் கேட்கிறோம். அவர்களுக்கு உடனடியாக நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

இளைஞர்களில் பெருந்தொகையினர் வெளிநாடுகளில் தொழில்புரிந்து வருகிறார்கள்.  அவர்களில் கணிசமான எண்ணிக்கையுடையோர் கடந்த சனாதிபதி தேர்தலில்  திருவாளர் கோட்டாபயவுக்கு வாக்களிப்பதற்காக இந்நாட்டுக்கு வந்தார்கள். இவர் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவார் என்ற நம்பிக்கையிலேயே அவர்கள் வந்தார்கள். ஆனால் தற்போது இந்நாட்டின் இளைஞர்கள் எதிர்பார்ப்புகள் சிதைந்தநிலையில் வெளிநாடு செல்வதற்காக  பிரயான அனுமதிச்சீட்டு கியூவரிசைகளில் நிற்கிறார்கள்.

அரசாங்கத்தை   வெற்றிபெறச் செய்விக்க செயலாற்றிய  இளைஞர்களின் தொழில் எதிர்பார்ப்பிற்கு அரசாங்கம் பிரதிபலிப்புச் செய்வது இவ்வாறுதானா என நாங்கள் கேட்கிறோம். ஆடைத் தொழிற்றுறையில் பெருந்தொகையான இளைஞர் தொழில்புரிகிறார்கள். குறிப்பாக கடந்த கோவிட் காலத்தில் அவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கினார்கள்.  குறைந்த சுகாதார வசதி நிலைமைகளின் கீழ் தொழில்புரியவேண்டி ஏற்பட்டது.

போனஸ் போன்ற மேலதிக கொடுப்பனவுகள் கத்தரிக்கப்பட்டன. எனினும் 2020 மார்ச்சு அளவில் ஆடைத்தொழிற்றுறை ஊடாக 317 மில்லியன் டொலர் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.  ஏற்றுமதி வருமானம் 460 மில்லியன் டொலர் வரை அதகரித்துள்ளது. இவ்விதமாக பாரிய அர்ப்பணிப்பினைச் செய்கின்ற இளைஞர்களின் நலனோம்பலுக்காக அரசாங்கம் இந்த வரவுசெலவில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புள்ளிவிபரவியல் திணைக்களம் உழைப்புப்படை சம்பந்தமான புத்தம்புதிய தரவுகளை வெளியிட்டுள்ளது. அதற்கிணங்க 2021 சனவரி தொடக்கம் யூன் வரையான காலப்பகுதிக்குள் தொழிலின்மை துரிதமாக அதிகரித்துள்ளது. எண்ணிக்கையில் மிகவும் அதிகமான தொழில்கள் கைத்தொழில் மற்றும் சேவைகள் பிரிவுகளிலேயே இல்லாதொழிந்துள்ளன.

இளைஞர்களே மிகவும் அதிகமான உழைப்பாற்றல் கொண்டவர்களாக விளங்கினாலும் நாட்டின் மிகவும் அதிகமாக தொழிலின்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களாக அவர்கள் விளங்குவது கவலைக்குரிய விடயமாகும்.  அவர்களின் கனவுகளுக்கு இப்படித்தானா கவனிப்பு  காட்டுவது என நாங்கள் அரசாங்கத்திடம் கேட்கிறோம். இந்த அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்ததாலேயே இளைஞர்கள் இந்த அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தார்கள்.  ஆனால் அவர்கள் இன்றளவில் அரசியல்வாதிகள்மீது மிகுந்த விரக்தியடைந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

 சோஷலிஸ இளைஞர் சங்கம் என்றவகையில் நீங்கள் உங்கள் எதிர்பார்ப்பு சிதைவடைய இடமளிக்கவேண்டாமென நாங்கள் அவர்களுக்கு கூறவிரும்புகிறோம். நீங்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய தலைமைத்துவம் எங்களிடம் இருக்கின்றது.

சோஷலிஸ இளைஞர் சங்கத்திற்கு, மக்கள் விடுதலை முன்னணிக்கு உங்களின் கனவு பற்றிய ஒரு தூரநோக்கு உண்டு.  அவற்றை யதார்த்தமானதாக ஆக்குவதற்கான  வேலைத்திட்டம் எம்மிடமே இருக்கின்றது. கனவாக  காண்கின்ற வனப்புமிக்க நாட்டை யதார்த்தத்தில்  கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்” என்றார்

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad வனப்புமிக்க நாட்டை யதார்த்தத்தில் கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்