சீனாவுக்கும் இந்தியாவுக்கும் வடக்கில் இடமளித்துள்ளோம்; அமைச்சர் வாசு

496 Views

வடக்கில் இடமளித்துள்ளோம்
வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை
மேற்கொள்ள இடங்களை வழங்கியுள் ளோம். இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை அடைவார்கள் என நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் ஊடக வியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-

“ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா காலப் பகுதியில் இருந்து இலங்கையானது சீனாவுடனும், இந்தியாவுடனும் நெருக் கமான தொடர்புகளைப் பேணுகின்றது. அவருடைய காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற் பட்டபோது எமது நாடு நடுநிலையாகச் செயற்பட்டிருந்தது.

தற்போதும் சீனா வுக்கும், இந்தியாவுக்கும் இடையில் முரண்பாடு நிலை காணப்படுக்ன்றது. அதனை நாம் ஜனாதிபதியுடன் பேசியே முடிவுகளை எடுத்து வருகின்றோம். நாம் எந்த நாடுகளுக்கும் எமது பகுதி களை விற்கவில்லை. எந்த நாட்டுக்கும் சார்பாகச் செயற்படவும் இல்லை.

இயற்கையான பகுதிகளில் அபிவிருத்தி செய்வதற்கு நாம் சில பகுதிகளை வழங்குகின்றோம். இதனால் எமது மக்களுக்கும் நன்மைகள் ஏற்படும்.   இந்தியாவும், சீனாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள வடக்கில் இடமளித்துள்ளோம். இதனால் வடபகுதி மக்களுக்கு அதிக நன்மைகள் ஏற்படும்.

காஸ் சிலிண்டர் பிரச்சினை தொடர்பில் நாம் பேசியிருக்கின்றோம். தேவையான காஸ் சிலிண்டர்கள் இருக்கின்ற போதும் அதில் பிரச்சினைகள் உள்ளன. அதனைப் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பாக மக்களுக்கு வழங்க அரசு என்ற வகையில் நடவடிக்கை எடுப்போம்.

யுகதனவி ஒப்பந்த விவகாரம் தொடர் பில் நாம் வழக்குத் தாக்கல் செய்துள் ளோம். அதற்கு நீதிமன்றம் தீர்ப்பை வழங் கவுள்ளது. நாம் கூறியது போன்றே அது வரும் என நம்புகின்றோம். இந்த விட யத்தில் இரண்டு, மூன்று அணிகளாகச் செயற்படுவதைப் பார்க்கின்றோம். இருப்பி னும் அரசு என்ற வகையில் அது தொடர் பில் நாம் மீண்டும் கலந்துரையாடவுள் ளோம்’  என்றார்.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad சீனாவுக்கும் இந்தியாவுக்கும் வடக்கில் இடமளித்துள்ளோம்; அமைச்சர் வாசு

Leave a Reply