திருகோணமலை:பாழடைந்து இருக்கும் அரச கட்டிடத்தை வைத்தியசாலையாக மாற்றக் கோரிக்கை

392 Views

அரச கட்டிடத்தை வைத்தியசாலையாக மாற்ற

திருகோணமலை- கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஜீத் நகர் கிராம மக்கள் வைத்தியசாலை இன்றி பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக கவலை தெரிவிக்கின்றனர். 2010 ம் ஆண்டில் கட்டப்பட்ட  இந்த அரச கட்டிடம் இற்றை வரைக்கும் திறந்து பாவனையின்றி  அப்பகுதி காடு மண்டிக் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மருத்துவ  உபகரணங்கள் தளபாடங்கள் சேதமடைந்துள்ள நிலையில்,   பாழடைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாழடைந்து இருக்கும் அரச கட்டிடத்தை வைத்தியசாலையாக மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2006 ம் ஆண்டு மீள் குடியேற்றப்பட்ட இக் கிராமத்தில் சுமார் 1400 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  இம் மக்கள், வைத்திய சேவையைப் பெற வேண்டுமாக இருந்தால் சுமார் 20 கிலோ மீற்றர் தூரத்திற்கு பணயிக்க வேண்டி உள்ளது.

கிண்ணியா தளவைத்தியசாலைக்கு செல்வதாக இருந்தால் பொது போக்குவரத்து இன்றி முச்சக்கர வண்டிக்கு 1000 ரூபாவுக்கு மேல் கொடுத்தே செல்ல வேண்டியுள்ளது. கர்ப்பிணித் தாய்மார்கள் வயோதிபர்கள் மாதாந்த கிளினிக் செல்வதும் கடினமாகவுள்ளது.

இந்நிலையில், குறித்த அரச கட்டிடம் கட்டப்பட்டும்  பயன்படுத்த முடியாத நிலையில் பாழடைந்து காட்சியளிக்கிறது. இதனை சீர் செய்து மக்களுக்கான வைத்திய சேவையை பெற்றுத் தருமாறும் உரிய அதிகாரிகளுக்கு அக்கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply