தியாகி பொன்.சிவகுமாரின் விடுதலை பயணத்தில் நாமும் பயணித்தோம்-மாவை சேனாதிராஜா

தியாகி பொன்.சிவகுமாரின் விடுதலை பயணத்தில் நாமும் பயணித்தோம். இனவிடுதலை போராட்டத்தில் ஒரு தலை மகனாக தனது உயிரினை அவர் பணயம் வைத்தமைக்காக நினைவு கூறுவதற்காக கூடியுள்ளோம். இவ்வாறாக நினைவினை கூறுகின்ற பொழுது தமிழர்களின்  விடுதலை கிடைத்தல் வேண்டும். அத்துடன் அவர்கள் சுதந்திரமாக வாழுதல் வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இன்றைய  இடம்பெற்ற தியாகி பொன்.சிவகுமாரின் 49 ஆவது  இணைவேந்தல் நினைவில் கலந்து  கொண்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

நாம் அனைவரும் அணி திரண்டு 49 ஆவது நினைவு நாளில் சிவகுமாரிற்கு எமது வணக்கங்களை சமர்பிப்பதற்காக கூடியுள்ளோம்.

49 ஆண்டுகளிற்கு முன்னர் தமிழ் தேச விடுதலைக்காக தமிழர்கள் மத்தியில் தியாக சிந்தனைகளையும், உயிரையே அர்ப்பணிக்க கூடிய நிலைமைகளும் ஒரு இளைஞனால் செய்யப்பட்டது என்றால் எமது சமுதாயத்தில் பேரெழிச்சியை ஏற்படுத்தியது.

அது மட்டுமன்றி பெரும் போராட்டங்கள்,இனவிடுதலையை மற்றும் தம்மையே அர்ப்பணிக்கும் சூழ்நிலைகளை ஏற்படுத்தியது என்பதிலும் மாற்று கருத்துகளிற்கு இடமில்லை என்றார்.