தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கேட்டால் மக்கள் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பாா்கள் – சுரேஷ்

அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி தமிழ் கட்சிகள் ஒன்றுபட் டு கேட்கும் பட்சத்தில் தமிழ் மக்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள். ஆது தொடர்பில் அச்சப்படதேவையி ல்லை என, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் திருகோணமலையிலுள்ள நகரசபை மண் டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் பேசுகையில்:

“தமிழ் தரப்புகள் அனைவரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்த செயற்பாட்டை உறுதியாக முள்னெடுத்து செல்ல வேண்டும். இதற்கு தமிழ் மக்கள் பெரும் ஆதரவளிப்பார்கள்.

1994 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு வாக்களித்தனர். இந்நிலையில் அவருக்கு தேர்தலில் 63 வீத வாக்கு கிடைத்தது. இவ்வாறான நிலையில் யுத்தம் நிறைவடைந்த பின் நடைபெற்ற 2010 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு கூறியதற்கு இணங்க வடகிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்தனர். இதன் பின்நடைபெற்ற 2015 ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் வேண்டுகோலின் போரில் மைத்திரிபால சிறிசேன 4 இலட்சம் வாக்குகளால் வெற்றி பெற்றார்.

அவருக்கு வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் நான்கரை இலட்சம் வாக்குகளை அளித்திருந்தனர். இதையடுத்து நடைபெற்ற 2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு வடக் கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்தனர். ஆகவே, சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கோரும்போது வடகிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர். இவ்வாறான நிலையில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஏன் வாக்களிக்க மாட்டார்கள். எனவே தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு பொது வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கேட்கும்போது நிச்சயம் வாக்களிப்பர்” என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தாா்.