கொரோனாவால் மீள்குடியேறிய கிராம மக்கள் தொழில் இன்றிப் பாதிப்பு

திருகோணமலை – வேலூர் மீள் குடியேற்றக் கிராம மக்கள், 1990 ஆம் ஆண்டு அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து பின் நாடு திரும்பிய நிலையில்,2010ம் ஆண்டு மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.

மீள் குடியேற்றக் கிராமம் 2018ம்  ஆண்டு காலப்பகுதியில் அமைக்கப்பட்டு 2010ம் ஆண்டு மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.

சுமார் 50 குடும்பங்கள் இக்கிராமத்தில் வாழ்கின்றன. இவர்களுள் 25 குடும்பங்கள் இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்று திரும்பி வந்து குடியேற்றம் செய்யப்பட்ட வர்கள்.

இக் கிராம மக்கள் தினக்கூலிகளாகவும், மீன்பிடித் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது இலங்கையில் பரவி வரும் கொரோனா தொற்றுக் காரணமாக அவர்கள் தமது வாழ் வாதாரத்தை இழந்துள்ளதாகக் கூறுகின்றனர்

 “தொழில் இல்லாததனால் கையில் பணம் இல்லை. அதனால் குழந்தைகளுக்குப் பால்மா வாங்க முடியாதுள்ளது. பிள்ளைகளின் நிலை மிக மோசமாக உள்ளது.

மீன்பிடித் தொழிலுக்கு செல்வது என்றாலும் போர் நடைபெற்றக் காலத்தைப் போல் தற்போதும்  “பாஸ்”  பெற்றுக் கொண்டு தான் கடலுக்குப் செல்ல வேண்டும். எங்கு சென்றாலும் கொரோனா காரணமாக தொழில் செய்வதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.

மேலும் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் கூட இல்லை” என கவலை தெரிவித்துள்ளனர் குறித்த கிராம வாழ் மக்கள்.

ilakku-weekly-epaper-144-august-22-2021