இலங்கை வந்தடைந்தார் விக்டோரியா நுலன்ட்

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களிற்கான உதவி இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் இலங்கை வந்தடைந்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்  அவரை வரவேற்றுள்ளார்.

நேபாளம் இந்தியா இலங்கைக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்வார்.

இலங்கை தனது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் எடுத்துவரும் முயற்சிகளிற்கு அவர் தனது  ஆதரவை வெளியிடுவார்.