வவுனியா:ஆசிரியர் போராட்டத்தால் பூட்டப்பட்டுள்ள பாடசாலைகள்

143 Views

ஆசிரியர் போராட்டத்தால்

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணி பகிஸ்கரிப்பு காரணமாக வவுனியாவில் பல பாடசாலைகள் பூட்டப்பட்டுள்ளதுடன் மாணவர்கள் திரும்பிச் செல்லும்நிலை ஏற்பட்டுள்ளது

200 உட்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகளை திறக்குமாறு அரசாங்கம் அறிவித்தல் விடுத்திருந்தது. ஆனால் ஆசிரியர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் அவர்களது போராட்டம் தொடர்கின்றது.

இந்நிலையில் வவுனியா 85 பாடசாலைகள் இன்று திறக்கப்படும் என வலயக்கல்வி அலுவலகங்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று காலை ஆசிரியர் போராட்டத்தால் பாடசாலைகள் பலவற்றின் முன் வாயிற்கதவு மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதன் காரணமாக பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பி சென்றிருந்தனர்.

ஆசிரியர் போராட்டத்தால்
இதேவேளை சில பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்ற போதிலும் குறைந்தளவான மாணவர்களே வருகை தந்திருந்தனர்.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad வவுனியா:ஆசிரியர் போராட்டத்தால் பூட்டப்பட்டுள்ள பாடசாலைகள்

Leave a Reply