ஆண்களுக்கு நிகராக கடற் தொழிலில் சாதிக்கும் ‘வலைப்பாடு’ பெண்கள்

504 Views

லங்கையில் நடை பெற்ற போர், வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது. உழைப்பாளி களாகவும், சமூகத்தில் பல சவால்களை எதிர் கொள்பவர் களாகவும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்  இருக்கின்றன. அதே நேரத்தில்  நுண்நிதி எனும் பாரிய கடன் சுமைக்குள்ளும் பெண்கள் தள்ளப் பட்டுள்ளனர். 

இந்நிலையில், வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள சில கடலோரக் கிராமங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக கடற் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள். மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட எல்லைப் பகுதிக் கரையோரக் கிராமமான வலைப்பாடு கிராமம் கடல் தொழிலையே பிரதான வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டுள்ளது. இக் கிராமத்தில் உள்ள பெரும்பாலான பெண்கள், ஆரம்பத்தில் நுண்நிதி நிறுவனங் களிடம் பணம் பெற்று கடனாளிகளாக மாறினார்கள். இந்தக் கடன்களை  மீளச் செலுத்து வதற்கும்,  குடும்பத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்று வதற்கும்,  பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக் காகவும்  ஆபத்து மிக்க கடற் தொழில்களை தற்போது  செய்து வருகின்றார்கள்

மேலும் வலைப்பாடு கிராமத்தில்  பல பெண்கள் வறுமை காரணமாக கழுத்தளவு தண்ணீரில் கடல் அட்டை பிடிக்கின்றனர். அத்துடன் பாசி வளர்ப்பும் செய்து வருகின்றார்கள்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வலைப்பாடு பெண் மீன்பிடி தொழிலாளர்கள், “நாங்கள் பல வருடங்களாக  மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம். எமது கிராமத்தில் பெரும்பாலான ஆண்கள் மீன் பிடியையே செய்கின்றனர். தற்போது எமது கிராம மட்டத்தில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் இந்த நிலை மாற்றம் அடைந்து, கடற் தொழிலைச் செய்ய பெண்களாலும்  முடியும்  என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடற் தொழிலில் ஆண்கள் எவ்வகையான தொழில்களில் ஈடுபடுகிறார்களோ அதே போன்று அனைத்து தொழில் முறைகளையும் பெண்களும் செய்து வருகின்றார்கள்” என்றனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply