சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உளவு பலூன் தொடர்பில் எழுந்த சர்ச்சையால் ஒத்திவைக்கப்பட்ட பயணத்தை மீண்டும் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஆரம்பித்துள்ளதாக வொசிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2018 ஆம் ஆண்டு அன்றைய வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோவின் பயணத்தின் பின்னர் அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் சீனாவுக்கு செல்வது அதுவே முதல்தடைவையாகும். சீனா பயணத்தின் போது அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் அந்தோனி பிளிங்டன் பிரித்தானியாவுக்கும் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இந்த வாரம் இடம்பெறும் இந்த பயணத்தின் போது அவர் சீனாவின் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுக்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பாடல்கள், பிராந்திய மற்றும் உலகின் உறுதித்தன்மை போன்றன தொடர்பில் பேச்சுக்களை மேற்கொள்ளும் பிளிங்டன் சீன தரப்பில் யாரை சந்திக்கப்போகின்றார் என்பதை தெரிவிக்கவில்லை.
இதனிடையே. கடந்த செவ்வாய்க்கிழமை (13) சீனா வெளிவிவகார அமைச்சர் குயின் ஹாங்கை தொடர்புகொண்ட பிளிங்டன் இரு நாடுகளும் தொடர்ந்து தொடர்புகளை பேணுவது அவசியம் என்பதை விளக்கியதாகவும், அதற்கு பதிலளித்த சீனா அமைச்சர் தற்போதைய நிலைக்கும், நெருக்கடிகளுக்கும் யார் காரணம் என்பதை நீங்கள் அறிவீர்கள் என பதில் அளித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இடைநிறுத்தப்பட்ட பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கின்றார் அமெரிக்க வெளிவிவகார செயலாளர்