சீனாவுடன் முழு அளவிலான போருக்கு தாம் தயாராக இருப் பதாக அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் பீற் ஹெசத் கடந்த புதன்கிழமை(5) தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் எந்த வகையான போரையும் எதிர்கொள்ளத் தயார் என சீனா அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்காவின் இந்த அறிவித்தல் வெளிவந்துள்ளது.
சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்கா 20 விகித வரியை விதித்ததற்கு பதிலடியாக அமெரிக்
காவின் பல பொருட்களுக்கு சீனாவும் 15 விகித வரியை உயர்த்தியதுடன், பலபொருட்க ளின் இறக்குமதிக்கும் தடை வித்திதுள்ளது. இது உலகின் மிகப் பெரும் பொருளாதார வல்லரசு நாடுகளான இரு நாடுகளுக்கும் இடையில் மோதல்களை அதி கரித்துள்ளது.
நாம் மிகவும் ஆபத்தான உலக ஒழுங்கில் வாழ்கின்றோம். உலகில் பல நாடுகள் மிகவும் பலம் வாய்ந்ததாக மாறி வருகின்றன. அவர்களின் கொள்கைகள் வேறு பட்டவை. அவர்கள் தமது பாதுகாப்புத்
துறையை விரிவுபடுத்தி வருவதுடன் புதிய தொழில் நுட்பத்திற்கும் மாறி வருகின்றனர். அந்த நாடுகள் தமது பாதுகாப்பு செலவீனத்தை கடுமையாக உயர்த்தி வருகின்றன. அமெரிக் காவை வீழ்த்துவது தான் அவர்களின் திட்டம். நாம் சீனாவையோ அல்லது வேறு நாடுகளையோ போரில் வெல்ல வேண்டுமென்றால் அதற்கு நாம் முதலில் பலமானவர்களாக இருக்க வேண்டும். நீண்ட அமைதியை விரும்புபவர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என பொக்ஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்கணலில் ஹெசத் தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப் படும் 370 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்ப் 2018 ஆம் ஆண்டு 25 விகித வரியை கொண்டுவந்திருந்தார். ஆனால் தற்போது மேலும் 20 விகித வரியை கொண்டுவந்துள்ளார்.
சீனாவும் அதற்கு பதிலடியாக அமெரிக்கா வின் விவசாயப் உற்பத்திப் பொருட்களுக்கு 10 தொடக்கம் 15 விகித வரியை கொண்டு வந்துள்ளதுடன், 25 இற்கு மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இது தொடர்பில் உலக வர்த்தக நிறு வனத்தில் அமெரிக்காவுக்கு எதிராக சீனா வழக்கு ஒன்றையும் தொடுத்துள்ளது.