ரஸ்யாவின் கைகளில் விமானம் சிக்கிவிடுமா என்ற கவலையில் அமெரிக்கா

102 Views

ரஸ்யாவின் கைகளில் விமானம் சிக்கிவிடுமா

கடந்த புதன்கிழமை (16) பிரித்தானியாவின் குயின் எலிசபத் என்ற பெரிய விமானந்தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்ட ஐந்தாம் தலைமுறை தாக்குதல் விமானமான எப்ஃ -35பி மெடிரரேனியன் கடலில் வீழ்ந்து நொருங்கியுள்ளது.

விமானி உயிர் தப்பிய போதும், 100 மில்லியன் பவுண்ஸ்கள் பெறுமதியான மிக நவீன விமானத்தை பிரித்தானியா இழந்துள்ளது. தற்போது இந்த விமானத்தை தேடும் பணிகளில் அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது பிரித்தானியா அரசு. அமெரிக்காவின் மிக நவீன தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானம் ரஸ்யாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் செல்லும் பாதையில் வீழ்ந்துள்ளதானது அமெரிக்காவையும், பிரித்தானியாவையும் அச்சமடைய வைத்துள்ளது. ரஸ்யாவின் கைகளில் விமானம் சிக்கிவிடுமா என்ற கவலையில் அமெரிக்கா உள்ளது.

இந்த விமானத்தின் முக்கிய தொழில்நுட்பங்கள் ரஸ்யாவின் கைகளில் சிக்கிவிடாமல் இருப்பதில் இந்த இரு நாடுகளும் குறியாக உள்ளன. எனவே தான் நீரூக்கடியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் CURV-21 என்ற இயங்திரத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகின்றது.

பிரித்தானியாவின் விமானங்தாங்கிக் கப்பலில் இந்தகைய 10 விமானங்கள் உள்ளதுடன், 9 பில்லியன் பவுண்ஸ்கள் செலவில் பிரித்தானியா 138 விமானங்களை அமெரிக்காவின் லொகீட் மார்ட்டின் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்திருந்தது.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 ரஸ்யாவின் கைகளில் விமானம் சிக்கிவிடுமா என்ற கவலையில் அமெரிக்கா

Leave a Reply