டெல்லியில் வாழ்பவர்களின் ஆயுட்காலம் 9 வருடத்தால் குறைகின்றது

289 Views

டெல்லியில் வாழ்பவர்களின் ஆயுட்காலம்

உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக இந்தியாவின் தலைநகர் புதுடில்லி மாற்றம் பெற்றுள்ளதுடன், டெல்லியில் வாழ்பவர்களின் ஆயுட்காலம் 9.5 வருடங்களால் குறைந்துள்ளதாக அமெரிக்காவின் சிக்காக்கோ பல்கலைக்கழகம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட நாசாவின் புகைப்படத்திலும் டெல்லியை புகைமூட்டம் சூழ்ந்திருந்ததுஅவதானிக்கப்பட்டது. அதிக மாசு காரணமாக இந்த வாரம் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் என்பன அங்கு முடப்பட்டன.

நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாயிகள் தமது நிலங்களில் காணப்படும் தேவையற்ற பயிர்களை தீ மூட்டி அழிப்பது ஆகிய காரணிகளே தற்போதைய நிலைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வாரம் ஏறத்தாழ 5  மின் உற்பத்தி ஆலைகளை இந்திய அரசு தங்காலிகமாக மூடியிருந்தது. எனினும் காற்றில் உள்ள மாசுக்களின் அளவு மனிதர்கள் வாழமுடியாத நிலையை அங்கு எட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply