வேலையில்லா பிரச்சனை – நெருக்கடியில் இந்தியா

377 Views

நெருக்கடியில் இந்தியா

நெருக்கடியில் இந்தியா: இந்தியாவில் வேலையில்லாதோர் தொகை கடந்த வருடம் 7 விகிதத்தை எட்டியுள்ளதாகவும், பெருமளவான மக்கள் குறைந்த ஊதியத்துடன் பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய பிரதேசத்தில் குறைந்த தகுதி கொண்ட 15 பேருக்கான பணி வெற்றிடத்திற்கு 10,000 பேர் விண்ணப்பித்திருந்ததாக ஜிரேந்திரா மூர்ஜா தெரிவித்துள்ளார். அவர்களில் பலர் பட்டதாரிகள், என்ன வேலை கிடைத்தாலும் ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் தயார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் வேலையில்லாதோர் எண்ணிக்கை 8 விகிதமாக உயர்ந்திருந்தது. 1991 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரும் நெருக்கடிகளுக்கு பின்னர் ஏற்பட்ட மிகப்பெரும் வேலையில்லா பிரச்சனை இதுவாகும்.

கோவிட் நெருக்கடியே இந்த நிலைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றபோதும், வளர்ந்து வரும் ஏனைய நாடுகளான பங்காளதேசம், மெக்சிகோ வியட்னாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வேலையற்றோர் விகிதம் மிகவும் உயர்வாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு வாழும் மக்களின் 45 விகிதமான பணியாளர்கள் மாதம் ஒன்றிற்கு 9,750 ரூபாய்களையே (130 டொலர்கள்) வருமானமாக பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply