அல்பேனியாவில் சிறப்பு படையினரின் தளம் அமைத்த அமெரிக்கா

424 Views

தளம் அமைத்த அமெரிக்கா

தளம் அமைத்த அமெரிக்கா: அமெரிக்காவின் சிறப்பு படையணி தனது தளம் ஒன்றை பல்கன் வளைகுடா நாடான அல்பேனியாவில் அமைத்துள்ளதாக அல்பேனியா பிரதமர் எடி ரமா  தெரிவித்துள்ளார்.

யூகோஸ்லாவாக்கியாவின் வீழ்ச்சிக்கு பின்னர் 2009 ஆம் ஆண்டு அல்பேனியா நேட்டோ கூட்டமைப்பில் இணைந்திருந்தது. தற்போது அல்பேனியாவில் சிறப்பு படை தளத்தை அமெரிக்கா அமைத்துள்ளது. அதன் நோக்கம் தெரியாதபோதும், எதிரி நாட்டு நிலைகளுக்குள் ஊடுருவி புலனாய்வுத் தகவல்களை திரட்டுவது நோக்கமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொசோவோ போரின் பின்னர் அமெரிக்கா 600 படையினரை சேர்பியாவின் நிறுத்தியிருந்தது. 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு பின்னரான கடந்த 10 வருடத்தில் அமெரிக்கா தனது சிறப்பு படையினரை இரு மடங்காக அதிகரித்துள்ளதுடன், அவர்களுக்கான செலவீடுகளை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் சிறப்பு படையினரின் பரம்பலையும் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.

Leave a Reply