அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கை அதிகாரிகளின் ஆய்வுக்கு அனுமதி மறுப்பு

431 Views

ஆய்வுக்கு அனுமதி மறுப்பு

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கை அதிகாரிகள் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.

திருச்சி மத்திய சிறை வளாக அகதிகள் சிறப்பு முகாமில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட வெளிநாட்டு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தண்டனைக் காலம் முடிந்தும் தங்களை விடுதலை செய்ய தமிழக அரசு மறுப்பதாகவும், மேலும் ஆய்வுக்கு அனுமதி மறுப்பு தெரிவிப்பதாகவும், அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் குற்றம்சாட்டி பல்வேறு கட்டப் பேராட்டங்களை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் நடவடிக்கையால் சில வெளிநாட்டு கைதிகள் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

Leave a Reply