ஐ.நா.வின் அனைத்துலக உணவு நாள், வறுமையொழிப்புநாள் அழைப்புக்களில் ஈழத்தமிழர்கள் உள்ளடக்கப்படுவார்களா?-சூ.யோ. பற்றிமாகரன்

314 Views

ஐ.நா.வின் அனைத்துலக உணவு நாள் 16.10.22 – வறுமை ஒழிப்புநாள்; 17.10.22 ஐ.நா. வின் உலக உணவுநாள், வறுமையொழிப்புநாள்  அழைப்புக்களில்; ஈழத்தமிழர்கள் உள்ளடக்கப்படுவார்களா?

‘யாரையும் பின்தங்க விடாதீர்கள்’ என்ற மையக்கருவுடன் உலக உணவுநாள் அக்டோபர் 16ம் நாளும், ‘கண்ணியம் எல்லோருக்கும் உரியதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்’ – என்ற மையக்கருவுடன் வறுமையொழிப்பு நாள் அக்டேபர் 17ம் நாளும் ஐக்கிய நாடுகள் சபையினால் இவ்வாண்டும் கொண்டாடப்படுகிறது.

சமுக நீதிக்கும், அமைதிக்கும், உலகத்தைப் பேணும் பொறுப்புக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடுகள் உடைய ஒன்றிணைந்த பங்களிப்புhக ;, ‘கண்ணியம் எல்லோருக்கும் உரியதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்’  அமைதல் முக்கியமானது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. மனிதக்கண்ணியம் அடிப்படை உரிமை மட்டுமல்ல மற்றைய அடிப்படை உரிமைகள் அனைத்தும் இதிலிருந்துதான் தொடங்குகின்றன. எனவே கணண்pயம் என்பது அரூபமான கோட்பாடல்ல ஒவ்வொருவருக்கும் சொந்தமான ஒன்று. இன்று பல மனிதர்கள் தொடர்ச்சியாக விடுபட முடியாத வறுமைக்குள் வாழ்ந்து கொண்டிருப்பதால் அவர்களின் கண்ணியம் மறுக்கப்பட்டு அவமரியாதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள். வறுமையை ஒழிப்பதன் மூலம் உலகைப் பாதுகாத்து உலகில் எவ்விடதிலும் எல்லா மக்களும் அமைதியிலும் வளர்ச்சியிலும் வாழ, அனைத்துலக மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் 2030க்குள்  நிலைப்படுத்த வேண்டும் என்கிற ஐ.நா.வின் செயற்திட்ட நிகழ்ச்சிநிரல்கள் முன்னெடுக்கப்பட்டு  வருகின்ற சமகால சூழலிலும் கூட உலகில் 1.3 பில்லியன் மக்கள் பல்பரிமாண வறுமையுள் வாழ்ந்து கொண்டிருப்பதும் இவர்களில் அரைவாசிப்பேர் குழந்தைகளாகவும் பெண்களாகவும் இருப்பதும் இன்றைய நடைமுறை எதார்த்தமாக உள்ளது.

வாய்ப்புக்களிலும் வருமானத்திலும் சமத்துவமின்மையும், ஒவ்வொரு ஆண்டும் மிக வேகமாக அதிகரிப்பது பணக்காரருக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் மேலும் அதிகப்படுத்திக் கொண்டு செல்கிறது. உழைப்பாளர்களுடைய உரிமைகளும், வேலைகளின் தரங்களும் கடந்த ஆண்டுகளில் ஒவ்வொருநாளும் குறைவுற்றுக் கொண்டே செல்வதால் மில்லியன் கணக்கானவர்கள் கடும் துன்பமடைந்து அடுத்த நாளை எப்படி வாழ்வது என்கிற நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். அதே வேளை பில்லியன் கோடீஸ்வரர்களின் கூட்டுறவும் செல்வப்பெருக்கும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது.

வறுமையும் சமத்துவமின்மையும் தவிர்க்க இயலாதவொன்றல்ல. வேண்டுமென்றே திட்டமிட்ட முடிவுகளாலும், செயல்படாது செய்யும் செயற்திட்டங்களாலும் ஏழைகளை வலுவிழக்கச் செய்வதனதும், சமுதாயத்திலிருந்து அவர்களைப் புறக்கணிப்பதனதும்,  அவர்களுடைய அடிப்படை மனித உரிமைகளை வன்முறைப்படுத்துவதனதும் விளைவே வறுமையும் சமத்துவமின்மையும். நீடித்த வறுமைக்கான வன்முறைகளைக் கண்டு  மௌனமாக இருத்தல் . சமுகவிலக்கல்களும், கட்டமைக்கப்பட்ட வலுவிழப்புக்களும் பாகுபாடுகளும் மேலும் மேலும் வளரச் செய்து மக்களை மீளஇயலாத வறுமைப் பொறிக்குள் சிக்க வைத்து அவர்களின் மனிதக் கண்ணியத்தை இழக்க வைக்கிறது. இந்நிலையை 2021இல் கோவிட் பெருந்தொற்று மேலும் மோசமாக்கி 163 மில்லியன் மக்களை மேலதிகமாக வறுமைக்குள் தள்ளியுள்ளது. இதனால் அதிக அளவு வறுமையுற்ற மக்கள் தெற்காசியாவிலேயே தோன்றியுள்ளனர்.

வறுமையினை ஒழித்தலை முக்கிய நோக்காக ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்து 35வது ஆண்டாகவும் அனைத்துலக வறுமை ஒழிப்புநாள் கொண்டாடப்படத் தொடங்கிய 30வது ஆண்டாகவும் உள்ள 2022இல் ஐ. நா., வறுமையில் வாழும் மக்களின் நாளாந்தத் துணிவை மதித்து அவர்களை ஏற்று உலக மக்கள் அனைவரதும் அவர்கள் குறித்த பொறுப்பை உணர்ந்து உலகசமுதாயத்தை அவர்களுடன் வளங்களைப் பகிர்ந்து கொள்ள ஐக்கிய நாடுகள் சபை அழைக்கிறது.

முன்னொருபொழுதும் இல்லாதவாறு பொருளாதாரவளரச்சிகளும், தொழில்நுட்ப எழுச்சிகளும், நிதிமூலவளங்களும் உலகில் உள்ள இன்றைய நிலையில் மில்லியன் கணக்கான மக்கள் வறுமையில் வாழ்தல் என்பது அறச்சீற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. வறுமை முழுவதும் பொருளாதாரப் பிரச்சினையல்ல. பல்பரிமாண நிகழ்வுகள் வழியாக வருமானக் குறைப்பையும் தன்மானத்துடன் வாழ்தலுக்கான ஆற்றலையும் அழிக்கும் செயல்களாலேயே வறுமை கட்டமைக்கப்படுகிறது.

வறுமையில் வாழும் மக்களின் அனுபவங்கள் அவர்கள் தங்களது உரிமைகளை உணர்ந்து வறுமையில் இருந்து விடுபடாதவாறு இயலாமைகளையும் பற்றாக்குறைகளையும் தாங்களாகவே தங்களது வாழ்வாக்கி வறுமையில் தொடர்ந்து வாழக் கூடிய வகையில் அவர்களிடை உள்ள பல உட்தொடர்புகள் செயற்படுகின்றன. இவற்றுள்

  • ஆபாயகரமான நிலைகளில் வேலை செய்வித்தல்
  • பாதுகாப்பற்ற வீடுகளில் வாழவைத்தல்
  • சத்துணவு குறைபாடுகள் உள்ள உணவளித்தல்
  • நீதியை அடைவதில் சமத்துவமின்மைகளை நடைமுறைப்படுத்தல்
  • அரசியல் சக்தியை இழக்கவைத்து குரலற்றவர்களாக்குதல்
  • மிக்குறைந்த மருத்துவ உடல்நலப் பேணல்களை வாழ்வாக்கல்

என்பனவும் அடங்கும். என்பது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டியலாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை 2030க்குள் வறுமையற்ற உலகை உருவாக்கத் தன்னால் இயன்றதைச் செய்தாலும் அதன் உறுப்புரிமை நாடுகள பல மேலே பட்டியலிட்டவ்றறைத் தங்களின் மேலாண்மையை மக்கள் மேல் செலுத்துவதற்கு அவர்களை வறுமைப்படுத்தலைத் தங்களின் அரசியல் செயற்திட்டமாகவே கொண்டு செயற்படுகையில் எவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை தனது இலக்கில் வெற்றியடைய முடியும் என்பதே இன்றுள்ள கேள்வி. அவ்வாறே யாரையும் பின்தங்க விடாதீர்கள்’ என உணவு வழங்கலில் அனைவருக்கும் சமமான பகிர்வு அமைந்தாலே பட்டினி மரணங்களைக் குறைக்கலாம்  என்பதை ஐக்கியநாடுகள் சபை வலியுறுத்தினாலும், சாதி மத மொழி இன பிரதேச Nவுறுபாடுகளுடன் அரசாங்கங்களே செயல்படுகையில் சாதாரண ஏழை மக்கள் எவ்வாறு பயன்பெற முடியும் என்பதும் பெருங்கேள்வியாகவே தொடர்கிறது.

இந்த இரண்டு விடயத்திலும் மக்கள் நிலத்திலிருந்து அரசாங்கங்களால் திட்டமிட்ட முறையில் வேறாக்கல் படுதல்தான் உணவுப் பஞ்சத்தையும் வறுமையையும் உற்பத்தி செய்கிறது என்பதே முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம்.

இதற்கு உலகிற்கு மிகச்சிறந்த உதாரணமாக இலங்கையில் தமிழர்கள் 1948 முதல் 1972ம் ஆண்டுவரையான பிரித்தானியக் காலனித்துவ அரசால் உருவாக்கப்பட்ட சோல்பரி அரசியல் அமைப்பின் கீழான சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்றக் கொடுங்கோன்மையிலும்,, 22.05.1972 முதல் இன்று வரை அரசற்ற தேசஇனமாக 50 ஆண்டுகள் சிறிலங்காவின் முப்படைகளிதும் ஆக்கிரமிப்பு மூலமான இனங்காணக்கூடிய அச்சவாழ்விலும் வறுமைக்குள்ளாக்பட்டார்கள் என்பதே அமைகிறது. முதலில் பிரித்தானியர் இலங்கையில் உருவாக்கிய பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் மனித மூலவளமாகவும் அக்காலத்து இலங்கை அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவத்தின் முக்கிய பங்காளர்களாகவும் விளங்கிய இந்தியத் தமிழர்களை அவர்கள் இலங்கையின் குடிமக்களாக இயற்கைநிலையால் (யேவரசயடளையவழைn) நிலைபெற்று முன்னாள் இந்தியப் பிரதமர் Nநுருவின் விளக்கப்படி நடைமுறை அரசுக்குரிய (னந கயஉவழ )  பரிணாம வளர்ச்சியைப் பெற்று சட்டரீதியான அரசாக (னந தரசந) பரிணாமம் அடைந்து வந்த நிலையில் அவர்களது குடியுரிமையைப் பறித்து மண்ணோடு அவர்களுக்கு இருந்த தொடர்பை அந்நியப்படுத்தித் தனிமையாக்கி அவர்களின் அரசியல் உரிமைகளையும்  அடிப்படை மனித உரிமைகளையும் வன்முறைப்படுத்தி அவர்களை நாடற்றவர்களாக்கி இன்pறு வரை அவர்களின் வறுமைநிலைக்கான மூலகாரணமாகச் சிங்களப் பெரும்பான்மை அரசுகள் திகழ்ந்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களை அவர்களது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான அவர்களது வரலாற்றுத் தாயகத்தில் இறைமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் தங்களுக்கான யாழ்ப்பாண அரசிலும் வன்னிச் சிற்றரசிலும் காலனித்துவ அரசுகள் வரும் வரை வாழ்ந்து வந்து போர்த்துக்கேயர், டச்சுக்காரர் உடைய காலினத்துவ ஆட்சியிலும் தங்களின் தயாக தேசிய தன்னாட்சி உரிமையுடன் அவர்களுக்குத் திறைசெலுத்தி அவர்களின் ஆட்சியில் பங்கேற்று வந்த தமிழர்கள் பிரித்தானிய காலனித்துவ அரசாலேயே தங்களின் இறைமை சிங்களர்களின் இறைமையுடன் இணைப்புற்ற ஒற்றையாட்சி முறைக்குள் சென்றனர். இந்த வரலாற்றுத் தவறைப் பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் மேற்கொண்டதன் விளைவாகவே 1947 இல் பிரித்தானிய காலனித்துவ அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சோல்பரி அரசியல் அமைப்பின் கீழ் முதலாவது இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்பட்ட நாள் முதல் இன்pறு வரை 75 ஆண்டுகள் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்றக் கொடுங்கோன்மையின் அரசியற் செயற்திட்டமான இனஅழிப்பு நோக்கிலான அரசியல் கொள்கைகள் கோட்பாடுகளாலும் படைபல அடக்குமுறையாலும் ஈழத்தமிழர்கள் தங்கள் சொந்தத் தாயக மண்ணிலேயே வாழுகின்ற நிலையிலும் மண்ணிலிருந்து  வேறுபடுத்தப்பட்டு வறுமையில் தொடர்ச்சியாக நிலைபெற்று வாழும் உலகின் மக்களினமாக இன்று உள்ளனர்.

இந்நிலையில் இரண்டு விடயங்கள் அவர்களின் வறுமையை ஓழிக்க ஐக்கிய நாடுகள் சபை செய்ய வேண்டும்.  ஒன்று ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் வறுமையால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களான ஈழத்தமிழர்களுக்கு அதீத மனிதாய தேவைகளில் உள்ள மக்கள் அவர்கள் என்பதை ஏற்று அவர்களுக்கான மனிதாய உதவிகளைச் சிறிலங்காவின் இறைமையை மீறி நேரடியாகச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வது அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்புடையது என்பதற்கு அன்றைய சதாம் குசைனின் குவைத் ஆக்கிரமிப்பு முதல் இன்றைய சிரிய அகதிகள் பிரச்சினை வரை எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. மற்றது பாலஸ்தீன மக்களுடைய பிரதிநிதிக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு வாக்களிக்கும் உரிமையற்ற பங்குபற்றும் சிறப்புரிமை அளித்தது போல ஈழத்தமிழர்களுக்கும் அவர்களின் வெளியக தன்னாட்சி உரிமையி0ன் அடிப்படையில் சிறப்பு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். இதுவே ஈழத்தமிழர்கள் சிறிலங்காவின் இனஅழிப்பு அரசியலால் மேலும் மேலும் வறுமையுறுவதைத் தடுக்கும் வழியாக அமையும்.

உலகநாடுகளில் புலம்பதிந்து வாழும் தமிழர்களைப் பொறுத்த மட்டில் தாயகத்தில் ஈழத்தமிழர்கள் வுறுமையில் இருந்து விடுபட உதவுவது என்பது பொருளாதார உதவிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் அவர்கள் உயிர் வாழ்தலுக்கும் சொத்துக்களைப் பேணுவதற்கும் அவர்களது நாளாந்த வாழ்வை இனங்காணக் கூடிய அச்சமின்றி வாழ்வதற்குமான அத்தனையையும் செய்யுமாறு உலகநாடுகளையும் அமைப்புக்களையும் நெறிப்படுத்துவதுடன் தாங்கள் தங்களது சமுகமூலதன்த்தையும் புத்திஜீவி இணைப்பையும் ஒரு குடைநிழல் அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் ஈழத்தமிழர்களுடனும் உலகத் தமிழர்களுடனும் தொடர்பாடல்களையும் உறவாடல்களையும் செய்ய முயற்சித்தல் இன்றைய காலத்தில் ஈழத்தமிழர்களின் வுறுமையை ஒழிக்க இன்றியமையாத தேவையாக உள்ளது. .இவைகள் எவ்வளவு விரைவில் நடைமுறையாகுமோ அவ்வளவுக்குத்தான் ஐக்கிய நாடுகள் சபையின் வறுமை ஓழிப்புக்கான அழைப்பான ‘ கண்ணியம் எல்லோருக்கும் உரியதாக நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் என்பது ஈழத்தமிழர்களையும் உள்ளடக்கியதாக மாறும். கண்ணியம் இனமானத்துடன் தன்மானத்துடன் தொடர்பானவொன்று. இதனால்தான் ஈழத்தமிழர்களின் தேசியத் தலைவரான Nவுலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தன்மானம் இனமானம் உயிரைவிட மேலானது என்று பலதடவைகளில் பலமாகக் கூறினார். கண்ணிய வாழ்வே வறுமை ஒழிப்புக்கான வாழ்வாக அமையும். அவ்வாறே யாரையும் பின்தங்க விடாது உணவு வழங்கல் என்பது Nவுறுபாடுகளை மதியாத அரசாங்கங்களால் உண்மையும் நேர்மையுமான முறையில் முன்னெடுக்கப்பட முடியாது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை பாதிப்புற்ற மக்களுடன் நேரடியாகத் தொடர்புகளை மேற்கொள்வதும் அதனை ஊக்குவிக்கக் கூடிய முறையில் உலகளாவிய நிலையில் தமிழர்கள் தாங்கள் தங்கள் தனித்துவங்களைப் பேணியநிலையில் பொதுவான குடைநிழல் அமைப்பையும் உருவாக்கிச் செயற்படல் அவசியம்.  புள்ளிவிபரங்களாலும் தரவுகளாலும் முடிவுகள் நிர்ணயிக்கப்படும் உலகில் இலங்கையில் யாரையும் பின்தங்க விடாத திட்டத்திற்கு நாலுநாட்களில் 70000 குடும்பங்களைச் சேர்ந்த 3 புள்ளி ஒன்று அளவிலானவர்கள் பதிவுகளை மேற்கொண்ட போதிலும். ஆதில் எத்தனை பேர் ஈழத்தமிழர்கள் என்பது கூட தெரியாத நிலை தொடர்வது உடன் மாற்றப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.

-மூத்த அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் –

Leave a Reply