ஐ.நாவில் கோட்டாபய உரை- சனல் 4 ஆவணப்படத்தை ஐநா உறுப்பினர்கள் பார்க்க வேண்டும்-பைடனுக்கான தமிழர்கள்

439 Views

சனல் 4 ஆவணப்படத்தை ஐநா உறுப்பினர்கள் பார்க்க வேண்டும்

சனல் 4 ஆவணப்படத்தை ஐநா உறுப்பினர்கள் பார்க்க வேண்டும்

ஐக்கிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் தூதுக்குழுக்கள் பிரிட்டிஷ் சனல் 4 ஆவணப்படமான இலங்கைக் கொலைக்களங்களைப் பார்க்குமாறு அமெரிக்கத் தமிழர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத் தொடரின் உயர் மட்ட விவாதம் இன்று ஐ.நா தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் ஆரம்பமாகவுள்ள இந்த கூட்டத்தொடரில் கோவிட் 19 விவகாரம், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி போன்ற விடயங்கள் ஆராயப்படவுள்ளது.

இந்த கூட்டத்தொடரின் 2ம் நாளில் சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே உரையாற்றவுள்ளார்.

இந்நிலையில், பைடனுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், கோட்டாபயவின் ஐ.நா உரைக்கு முன்னதாக ஐ.நா உறுப்பினர்கள் பிரிட்டிஷ் சனல் 4 ஆவணப்படமான இலங்கை கொலைக்களங்களை பார்வையிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் குறித்த அறிக்கையில்,

ஐக்கிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் தூதுக்குழுக்கள் இங்கிலாந்து சனல் 4 ஆவணப்படமான இலங்கைக் கொலைக்களங்களைப் பார்க்குமாறு அமெரிக்கத் தமிழர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். இலங்கை இராணுவத்தின் தலைவராக பணியாற்றும் போது தற்போதைய இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச எவ்வளவு இரக்கமற்ற, பயங்கரமான மற்றும் கொடூரமானவர் என்பதை பிரிட்டிஷ் ஆவணப்படம் காட்டுகிறது.

ஐநா உறுப்பினர்களை மனித நேயத்தின் பெயரால் அவரது உரையை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம், அதற்கு பதிலாக ராஜபக்சேவின் கட்டளையின் போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் பாதிக்கப்பட்டவர்களை பிரார்த்தனை செய்து கௌரவிக்க வேண்டும் என வேண்டுகிறோம்.

ராஜபக்சே தமிழர்களைக் கடத்த வெள்ளை வான்களைப் பயன்படுத்தினார், பின்னர் காலிக்கு அருகில் இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அருகில் இந்தியப் பெருங்கடலில் உள்ள சுறாக்களுக்கு உணவளிக்க கொலைசெய்யப்பட்ட தமிழர்களின் உடல்களை பயன்படுத்தினார். ராஜபக்சே தனது உணவிற்காக சுறாக்களைப் பிடிக்கும் இடமும் இதுதான்.

கோத்தபாய ராஜபக்ச மிருகத்தனமான மற்றும் கொடூரமான மனிதர். மனித உரிமைகள் மீது அக்கறை கொண்ட எந்தவொரு ஐ.நா. உறுப்பினர்களும் அவரது பேச்சை புறக்கணிக்க வேண்டுகீரோம்.

ராஜபக்சவின் நடவடிக்கைகளின் விளைவாக, 146,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர், 80,000 விதவைகள் மற்றும் 50,000 அனாதைகள் ஆக்கப்பட்டனர் , மேலும் 25,000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இவை அனைத்தும் அவரது இராணுவத் தலைமையின் கீழ் 2009 இல் நடந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்க்க -இலங்கையின் கொலைக்களத்திற்கான இணைப்பு: https://youtu.be/3aBLl_M3z40

 பிரிட்டிஷ் சனல் 4 ஆவணப்படமான இலங்கை கொலைக்களங்களை இதோ கீழே இணைத்துள்ளோம்.

ஐ.நா. இனப்படுகொலை மாநாட்டின் கீழ் நடந்த இனப்படுகொலையை வரையறுக்கும் ஐந்து பிரிவுகள் கோட்டாபய ராஜபக்ஷவால் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது எப்படி அது நிரூபிக்க படுவதை என்பதை இந்த வீடியோ ஆவணப்படுத்துகிறது.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021

Leave a Reply