உக்ரைனின் ஊடகத்துறைக்கு தேவையான நிதியின் 90 விகிதமானவை மேற்குலகத்தினால் வழங்கப்படுவதாகவும், அமெரிக் காவின் யுஎஸ் எயிட் எனப்படும் அமைப்பு 80 விகிதமான நிதியை வழங்கி வந்ததாகவும் The Institute of Mass Information என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவர் ஒக்சானா றொமான்யுக் புதன் கிழமை(29) தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ரஸ்யாவு டன் போர் ஆரம்பமாகிய பின்னர் உக்ரைன் ஊடகங்களுக்கான விளம் பர வருமானம் 90 விகிதத்தால் வீழ்ச்சி கண்டிருந்தது. எனவே பல ஊடகங்கள் வெளிநாடுகளில் உதவிபெறும் நிலைக்கு தள்ளப் பட்டன. சில ஊடகங்கள் 100 விகித உதவியை மேற்குலக நாடுகளில் பெற்றே இயங்கி வருகின்றன.
தற்போது அமெரிக்காவின் புதிய அரச தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அபிவிருத்தி நிறுவனத்தால் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் உதவியை 90 நாட்களுக்கு நிறுத்தியுள்ளார். அது இந்த ஊட கங்களை கடுமையாக பாதிக்கலாம். பல ஊடகங் கள் தமது நிகழ்ச்சிகளை நிறுத்தியுள்ளன. அவர்கள் அவசர நிதி உதவியை தற்போது கோரிநிற்கின்றன.
இதுவரையில் அமெரிக்கா தான் உக்ரை னின் ஊடகங்களை இயக்கி வந்திருந்தது. ஆனால் தற்போது உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்திடம் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றது. ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவி வழங்கினால் மட்டுமே ஊடகங்கள் இயங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யுஎஸ் அமைப்பினால் 2023 ஆம் ஆண்டு வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்ட 60 பில்லியன் டொலர்கள் உதவியில் பெருமளவானவை உக்ரைனுக்கே வழங்கப்பட்டிருந்தது. உக்ரை னின் ஊடகத்துறைக்கு அது 145 மில்லியன் டொலர்களை வழங்கியிருந்தது.