உக்ரைன் போர் பல தசாப்தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் – துருக்கி

உக்ரைன் போர்

உக்ரைன் போர் உலகில் புதிய பனிப்போர் நிலையை உருவாக்குவதுடன், புதிய உலக ஒழுங்கையும் ஏற்படுத்தும், அதன் தாக்கம் பல தசாப்தங்கள் நீடிக்கும் என துருக்கி அரச தலைவரின் பேச்சாளர் இப்ராஹீம் ஹாலின் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினை மிகவும் ஆழமாகப் போகும், புதிய சமநிலையை அது உருவாக்கும், குறுகிய கால நலன்களை விடுத்து, அது நீண்டகால பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன், மிகப்பெரும் இழப்புக்களையும் ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் போர் ஆரம்பமாகியதில் இருந்து துருக்கி நடுநிலைமையை வகிக்கின்றது. இரு தரப்புக்களுக்கும் இடையில் பேச்சுக்களை நடத்துவதற்கு உதவி வருவதுடன், ரஸ்யாவை தனிமைப்படுத்துவது பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் எனவும் அது தெரிவித்து வருகின்றது.

இதனிடையே, முன்னைய பனிப்போர் காலத்தை போல் அல்லாது தற்போதைய நிலையில் எந்த நாடும் தனியான அதிகாரத்தை செலுத்த முடியாது என ரஸ்யாவின் அதிபர் விளாடீமிர் புட்டின் கடந்த செவ்வாய்க்கிழமை (12) பேசும் போது தெரிவித்திருந்தார்.