இலங்கைக்கு மேலதிகமாக 5.75 மில்லியன் டொலர்களை வழங்கியது அமெரிக்கா

அமெரிக்க அரசாங்கம் மேலதிகமாக 5.75 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த மூன்றாவது தவணை புதிய நிதியுதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த பண உதவி, குறுகிய கால வேலைகள் மற்றும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நேரடியாக விதைகள் போன்ற விவசாயப் பொருட்களை வழங்க பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamil News