மேல் மாகாணத்தில் 3,731 டெங்கு நோயாளர்கள் பதிவு

இலங்கையின் மேல் மாகாணத்தில் 3,731 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவில்லை என டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இம்மாதம் கொழும்பு மாவட்டத்தில் 2,063 நோயாளர்களும் களுத்துறை மாவட்டத்தில் 687 நோயாளர்களும் கம்பஹா மாவட்டத்தில் 981 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

Tamil News