ரஷ்ய எரிபொருள் நிறுவன பிரதிநிதிகள் இலங்கை வருகை

117 Views

இரண்டு ரஷ்ய எரிபொருள் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பிரதிநிதிகள் இன்று இலங்கைக்கு பயணம் செய்துள்ளனர்.

இந்த பயணத்தின் போது, ​​எரிபொருள் இறக்குமதி தொடர்பில் சம்பந்தப்பட்ட எரிபொருள் நிறுவன பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

ரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் பஹ்ரைன் ஊடாக இலங்கைக்கு வரவேண்டியிருந்துள்ளது.

குறித்த பிரதிநிதிகளை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்டோர்  வரவேற்றுள்ளனர்.

Leave a Reply