இலங்கையில் நெருக்கடி- மூடப்படும் விலங்கு பண்ணைகள்

102 Views

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை கரமாக காரணமாக நாடளாவிய ரீதியில் சிறு மற்றும் நடுத்தர விலங்கு பண்ணைகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை மூடப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

மின்வெட்டு, எரிபொருள் பற்றாக்குறை  மற்றும் விலங்கு உணவுகளின் விலை அதிகரிப்பு என்பன விலங்கு பண்ணைகளை மூடுவதற்கு காரணமாய் அமைந்துள்ளன.

கடந்த காலத்தில் 3,200 ரூபாவாக விற்கப்பட்ட கோழி தீவனம் பொதி ஒன்றின் விலை தற்போது 13,000 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கால்நடை வளர்ப்பாளர்களும் பெரும் நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

முன்னர் 2000 தொடக்கம் 3000 ற்குள் விற்பனையாகிய மாடுகளுக்கான தீவனம்  மற்றும் தவிடு என்பற்றின்   விலை உயர்ந்துள்ளதனால் தம்மால் கால்நடைகளை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.    இதனால் இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகளும் பாரியளவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

Leave a Reply