பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகல்

136 Views

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இன்று ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பிரதமராக இன்னும் சில மாதங்களுக்கு தொடர்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் செவ்வாய்க்கிழமை  பதவி விலகியுள்ளனர். இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், போரிஸ் ஜான்சன் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply