இந்தியர்களுடன் இரு சரக்கு கப்பல்கள் கடத்தல்!

எரித்​திரியா நாட்​டைச் சேர்ந்த சிபு 1 என்ற எண்ணெய் கப்​பல் நேற்று முன்​தினம் ஏமன் கடல் பகு​தி​யில்  16 இந்தியர்கள் உட்பட 20 ஊழியர்​களுடன்   சென்று கொண்​டிருந்​த​போது ஆயுதமேந்​திய கடற்கொள்​ளை​யர்​கள்  சிபு 1 எண்​ணெய் கப்​பலை கடத்​திச் சென்​றனர்.

இந்த கப்​பல் ஈரானில் இருந்து கச்சா எண்​ணெயை ஏற்றி பல்​வேறு நாடு​களுக்கு விநி​யோகம் செய்து வந்​த​தாகக் கூறப்​படு​கிறது. தற்​போது எண்​ணெய் கப்​பல் நிர்​வாகம் சார்​பில் சோமாலிய கடற்​கொள்​ளை​யர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

கேமரூன் நாட்​டைச் சேர்ந்த லுதுப் என்ற சரக்கு கப்​பல் சோமாலியா​வின் புன்ட்​லேண்ட் கடல் பகு​தி​யில் சென்று கொண்டிருந்​த போது   6 இந்​தி​யர்​கள் உட்பட 10 ஊழியர்களுடன்   ஆயுதமேந்​திய கடற்கொள்​ளை​யர்​கள் கப்​பலை கடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.