ஐரோப்பிய நாடுகளில் நிலை கொண்டுள்ள அமெரிக்காவின் 84,000 படையினரில் கணிச
மான படையினரை வெளியேற்றப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த புதன் கிழமை(9) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படையினரை ஐரோப்பாவில் தொடர்ந்து வைத் திருக்க வேண்டும் என்றால் நேட்டோ கூட்டமைப்பில் உள்ள ஐரோப்பிய நாடுகள் அதிக நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்க வேண்டும் இல்லை எனில் படையினரை ஐரோப்பாவில் இருந்து மீளப்பெறு வது தொடர்பில் அமெரிக்கா சிந்திக்கும்.
ஐரோப்பாவில் நிலைகொண் டுள்ள படையினருக்கு நாம் நிதியை வழங்கிவருகின்றோம். அதற்கான பலனை நாம் பெறவில்லை. எனவே இது தொடர்பில் நாம் முடி வெடுக்கவேண்டிய நேரம் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், ஐரோப்பாவில் இருந்து 10,000 படை யினரை அமெரிக்கா வெளியேற் றப்போவதாக கடந்த செவ்வாய்க் கிழமை(8) என்.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. எனினும் சரியான எண்ணிக்கை தெரியவில்லை என கூறப்படுகின்றது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள படையினரே வெளியேற்றப் படவுள்ளதால், ரஸ்யாவின் எல்லையில் உள்ள நேட்டோ நாடுகளான ரோமானியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் உள்ள படையினரே மீளப்பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின் றது.
2025 ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படை யில் ஐரோப்பாவில் 84,000 அமெரிக்கப் படை
யினர் நிலைகொண்டுள்ளனர். அவர்களில் பெரு மளவான படையினர் போலந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். ரோமேனியா, ஏஸ்ரோனியா மற்றும் லுத்து வேனியா ஆகிய நாடுகளில் சிறிய அளவிலான படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
படையினரை வெளியேற்றுவது தொடர் பில் நேட்டோவின் கட்டளைத்தளபதி ஜெனரல் கிறிஸ்தோபர் கவோலி தனது எதிர்ப்பை தெரிவித்தாலும், படையினரின் நடவடிக்கை தொடர்பில் முடிவை எடுப்பது ட்றம்பின் கையில் தான் உள்ளது எனவும், அது ரஸ்ய – உக்ரைன் அமைதி பேச்சுக்களின் பின்னணியில் தங்கியுள்ளது எனவும் அமெரிக்காவின் பாது காப்புச் செயலாளர் பீற் கெசத் தெரிவித்துள்ளார்.