மெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா 5,000 டொலர்கள் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார்.
டல்லாஸ் நகரில் புதனன்று நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டில் அதிபர் ட்ரம்ப் பேசுகையில், “வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், உங்களுக்கும் வெற்றி நிச்சயம். ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5,000 டொலர்கள் கிடைக்கும். இது ட்ரம்ப் ஈவுத்தொகை என அழைக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.



