ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்துத்துறை பகுதியில இராணுவம் மற்றும்  கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை (11) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தபாலகத்திற்கு சொந்தமான காணி,  நீதிமன்றத்திற்கு சொந்தமான காணி,  பருத்தித்துறை நகர சபைக்கு சொந்தமான காணி மற்றும் கடற்படையால்  ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை விடுவிக்குமாறுகோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.