ஈரானிய எதிர்ப்புக்கு பணிந்தார் ட்ரம்ப்

ஈரானை சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் பாரசீகவளை குடாவின் பெயரை மாற்று வது என்ற தனது திட்டத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கியுள்ளதாக அமெரிக்காவைத் தள மாகக் கொண்ட சி.என்.என் ஊடகம் கடந்த புதன்கிழமை(14) செய்தி வெளியிட்டுள்ளது.
ஓமானில் இரு நாடுகளுக் கும் இடையில் இடம்பெற்றுவரும் அணு ஆயுதம் தொடர்பான பேச்சுக் களில் அமெரிக்காவின் நடவடிக்கை பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என்ற நிலையில் ட்ரம்ப் தனது திட்டத்தை கைவிட்டுள்ளார். ஈரானின் தென் கரையில் உள்ள பாரசீக வளைகுடாவிற்கு அமெரிக்க அதிபர் அரேபியன் வளைகுடா என பெயர் மாற்றம் செய்யப்போவதாக வும், அவர் மே மாதம் 13 ஆம் நாள் மத்தியகிழக்கிற்கு பயணம் மேற்கொள்ளும் போது அந்த அறிவிப்பை வெளியிடப் போவதாகவும்  முன்னர் தெரிவிக்கப்பட்டி ருந்தது. எனினும் தற்போது தனது முடிவில் இருந்து ட்ரம்ப் பின் வாங்கியுள்ளார். தனது முடிவா  ல் சிலரின் உணர்வுகள் பாதிக்கப்படும் என்பதால் தான் அதனை கைவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த முடிவுக்கு ஈரான் தனது கடுமையான எதிர்ப்பை முன்னர் தெரிவித்திருந்தது.
ஈரானின் அணு ஆயுத திட்டம் தொடர் பில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்குமிடையில் ஓமானில் பல சுற்று பேச்சுக்கள் இடம் பெற்றுவருகின்றன. பேச்சுக்கள் முன்னேற்றம் உள்ளதாக இரு தரப்பும் தெரிவித்து வருகின்றன. ஈரானுடன் ஒரு உடன்பாட்டை மேற்கொள்ள தான் விரும்புவதாக கடந்த புதன்கிழமை(14) சவுதிஅரேபியாவின் தலைநகர் றியாத்தில் பேசும் போது ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் முன்னர் இருந்த உடன்பாட்டை 2015 ஆம் ஆண்டு ட்ரம்ப் முடிவுக்கு கொண்டு வந்திருந்தார். அதற்கு அவர் ஈரான் உடன்பாட்டை மீறியதாக குற்றம் சுமத்தியிருந்தார்.