கொழும்பு வைத்தியசாலையில் கைக்குண்டு – திருகோணமலை இளைஞர் கைது

149 Views

வைத்தியசாலையில் கைக்குண்டு

கொழும்பு, நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞரொருவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

லங்கா தனியார் வைத்தியசாலையின் முதலாவது மாடியிலுள்ள கழிப்பறையொன்றில் இருந்து நேற்றைய தினம் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டிருந்தது.

மீட்கப்பட்ட கைக்குண்டு இராணுவத்தின் குண்டு செயலிழக்கச்செய்யும் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யபப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply