ஈபிடிபியினர் எதிர்ப்புக்கு மத்தியிலும் வேலணை பிரதேச சபையில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி

நேற்று காலை நடைபெற்ற வேலணை பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் தியாகி திலீபனுக்கு நினைவஞ்சலி செலுத்த வேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதிலும் ஆளும் கட்சியினரான ஈபிடிபியினர் அக்கோரிக்கையை நிராகரித்து சபையை ஒத்தி வைத்திருந்தனர்.

ஆனாலும் சபை ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்களால் தியாகி திலீபனுக்கான நினைவேந்தல் உணர்பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது .

வேலணை பிரதேச சபையின் தவிசாளர் உட்பட ஈபிடிபி கட்சியின் 8 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றின் தலா ஒரு உறுப்பினரும் திலீபனை நினைவு கூர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபையிலிருந்து வெளியேறியிருந்தனர் .

இதையடுத்து முற்பகல் 10.50 மணியளவில் த.தே.கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்களால் தியாகி திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.