யாழ். கொக்குவில் பிரம்படி படுகொலையின் 35ஆவது நினைவேந்தல் இன்று

153 Views

கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டொபர் மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்திய இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட “ஒப்பரேசன் பவன்” நடவடிக்கை மூலம் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட பொது மக்களை இந்திய இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.

இந்நிலையில்,  இவ்வாறு இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று  இடம்பெற்றது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஆடியபாதம் வீதி , பிரம்படியில் அமைந்துள்ள நினைவு தூபி முன்பாக   நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

படுகொலையானவர்களின் உறவுகள் நினைவேந்தலில் கலந்து கொண்டு உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply