எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியின் சர்வதேச கால நிலை ஆலோசகராக நியமனம்

266 Views

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரோடு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டும் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் சர்வதேச பருவநிலை தொடர்பான ஆலோசனைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு மிகவும் சிறப்பு மிக்கது என எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

மேலும் பசுமைப் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் இலங்கையின் காலநிலை தொடர்பான தலைமைத்துவத்திற்கான தொலைநோக்கு பார்வை, ஜனாதிபதிக்கு உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply