யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரிப்பு- விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கிவைப்பு

136 Views

யாழ். மாநகரில், போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில், அதில் இருந்து இளைஞர்களை பாதுகாப்பதற்கான தீர்வுகள் மிக விரைவில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு துண்டுப்பிரசுரங்கள் இளைஞர்களுக்கும் பெற்றோருக்கும்  வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுந்தரத்தினால் இந்த துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் தேசிய மட்டத்திலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply