ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் யாழ் மாவட்டத்தை பிரதானமாக பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான மற்றுமொரு சுற்று கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5.30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பின் போது, அதிகாரப் பகிர்வு, வடமாகாணத்தில் காணிகளை விடுவித்தல் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்படவுள்ளது.
இரு பிரிவினருக்கும் இடையே கடந்த வாரம் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
வடக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினரும் மீண்டும் ஒருமுறை சந்திப்பதற்கு இணங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.