இலங்கையில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை கைவசம் வைத்திருத்தல் அத்தியாவசியமாகும் வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம்திகதிக்கு பின்னர், பொது இடங்களுக்கு செல்வோரிடம் கோவிட்-19 தடுப்பூசி இரண்டும் செலுத்தியமைக்கான அட்டை குறித்து சோதனை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பின்னர், பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை வைத்திருந்திருத்தல் கட்டாயமானது எனவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் கோவிட் மூன்றாவது அலை தற்போது மிக வேகமாக பரவி வருகின்றது.
இது வரையில் இலங்கையில், கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,47,500 ஆக உயர்வடைந்துள்ளது. அதே நேரம் 5620 பேர் இது வரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோவிட் 19-ன் டெல்டா திரிபு வேகமாக பரவி வருகின்றது. இற்த பின்னணியில், தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை கைவசம் வைத்திருத்தல் மிகவும் அத்தியாவசியமானது என்ற அறிவிப்பை அரசாங்கம் விடுத்துள்ளது.